மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்த மணமக்கள் !!

0
80

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பல வகையான கார்கள் இருந்தும் மணமக்கள் மாட்டுவண்டியை தேர்வு செய்து பயணித்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே செஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும், புனிதா என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு தேவனாம்பாளையம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயில் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது முடிந்தது. மணமகன் மற்றும் மணமகள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களை ஏற்றி செல்ல பல வகையான கார்கள் அணிவித்து நின்றபோதும், பழமையைப் போற்றும் வகையில் இருவரும் மாட்டுவண்டியில் பயணம் செய்ய தேர்வு செய்து பயணித்தது, அப்பகுதிகளில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

கோவிலிருந்து வீட்டிற்கு சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் கிராமப்புற சாலையில் , மணமக்கள் இருவரும் மாட்டுவண்டியில் பயணித்தனர். இவர்களைத் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களிலும் , கார்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மெல்ல மெல்ல பயணித்து ஊர்வலமாக வந்தனர்.

இதுகுறித்து மணமக்களிடம் கேட்கையில், மண்ணின் மனம் மாறாத சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக தாங்கள் மாட்டுவண்டியில் பயணித்ததாக மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

author avatar
Parthipan K