மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்துங்கள்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை!
நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என அரசு பள்ளி மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் வழிகாட்ட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு 2023 ஜனவரி முதல் மத்திய அரசால் நீட் ,ஜே.இ.இ, என். ஐ.எஃப்.டி போன்ற பல தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இதனை அடுத்து நீட் உள்பட 15 வகையான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என தலைமை ஆசிரியர்கள் விளக்க வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் அரசு பள்ளி மாணவர்கள் பின் தங்கியுள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு நடைபெறும் இந்தத் தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை நடத்தப்பட உள்ள நீட் ,ஜே.இ.இ, என்.ஐ.எப்.டி, ஐ.சி.ஏ.ஆர், என்.டி.ஏ உள்பட 15 வகையான நுழைவுத் தேர்வுகளை எழுத விருப்பப்படும் மாணவ மாணவியர்களுக்கு அதன் முழுமையான விபரங்களை தலைமையாசிரியர்கள் விளக்கிக் கூறி தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் எந்தெந்த தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது, எப்போது விண்ணப்ப பதிவு துவங்கும், அதற்கான விண்ணப்ப கட்டணம், கல்வித் தகுதி, எந்த எப்படி இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை மற்றும் அது குறித்த விவரங்களையும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அந்த சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த சுற்றறிக்கையில் உள்ள விபரங்களை அறிந்து கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நுழைவுத் தேர்வு எழுத விருப்பப்படும் மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து விண்ணப்பிப்பதற்கு ஊக்கப்படுத்த வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.