நீட் தேர்வு விவகாரம் குறித்து ஜனாதிபதி அளித்த பதில்
நாடு முழுவதும் கடந்த ஐந்து வருடமாக, கொரானா வைரஸ்ஸை விட மிக வேகமாக மக்களிடையே பரவியது தான் நீட் தேர்வு விவகாரம்.
இந்த நீட் தேர்வு முறையை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும், சமமாகவே உள்ளனர்.
இந்த நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யாத அரசியல் கட்சிகளும் உண்டா அல்லது பொது அமைப்புகள் தான் உண்டா.
நீட் தேர்வை வைத்து தமிழகத்தில் தான் அதிகப்படியான அரசியல் நடைபெற்று வருகிறது என்பதில் மிகையல்ல.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து தான் என்று கூறி வந்த நிலையில் அதற்கான முயற்சியை எடுத்தது.
அந்தவகையில் சட்டமன்ற கூட்ட தொடரில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றிய திமுக அரசு, கவர்னர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பியது.
இந்த சட்ட மசோதா தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு விமர்சனங்கள் தொடுத்து வந்த நிலையில், பல்வேறு கட்ட போராட்டங்களும் நடைபெற்றன.
இந்த நீட் விலக்கு மசோதாவிற்கு தமிழக ஆளுநர் கையெழுத்து போடவில்லை என, ஒரு கட்டத்தில் தமிழக ஆளுநர் மீது ஆளும் திமுக அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியது. மேலும் இது தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தும் முறையிட்டு வந்தனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நீட் தேர்விற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டி ஜனாதிபதி திருமதி. திரௌபதி முர்முவிற்கு கடிதம் எழுதினார்.
மதுரை மாவட்ட எம்பி வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஜனாதிபதி முர்மு எழுதிய பதில் கடிதத்தில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிகக கோரும் சட்ட மசோதாவானது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைகாக அனுப்பப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பதிலை பார்க்கும் போது நீட் தேர்விற்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.