ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது

Photo of author

By Anand

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி அலுவலருக்குக் குடியரசுத் தலைவர் விருது

மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் சிறப்புமிக்க சேவைக்காக, குடியரசுத் தலைவர் பதக்கங்களுக்கும், சான்றிதழ்களுக்கும் அவர்கள் பரிசீலிக்கப்படுகிறார்கள்.

இந்தத் துறையின் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறையில்லாத, சிறப்புமிக்க செயல்பாடு அடிப்படையில் இந்த அதிகாரிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

இந்த வகையில், இந்த ஆண்டு சிறப்புமிக்க சேவை புரிந்தமைக்காகக் குடியரசுத் தலைவர் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல ஜிஎஸ்டிமத்திய கலால் வரி முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலகக் கண்காணிப்பாளர் திருமதி வி.ஸ்ரீதேவிதெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர், ஜிஎஸ்டி, மத்திய கலால் வரி, கணினி போன்ற பல்வேறு தலைப்புகளில் முறையான பயிற்சியாளராக இருப்பவர். வரி ஏய்ப்பு எதிர்ப்புப் பணி, பில் வர்த்தக வழக்குகள் பதிவு ஆகியவற்றில் சாதனை படைத்துள்ள இவர், ஜிஎஸ்டி, மத்திய கலால்வரி ஆகியவற்றின் மூலம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தவர். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட போது, அதுகுறித்து தூர்தர்ஷன், எஃப்எம் வானொலி, யூடியூப் அலைவரிசை ஆகியவற்றில் தமிழில் விளக்கமளித்து, துறையின் முகமாக விளங்கியவர். ஜிஎஸ்டியில் வர்த்தகம் செய்வதற்கு மிகச்சிறந்த பயிற்சியாளராகவும் திகழ்ந்தவர்.   

இந்தியாவின் 71-வது குடியரசு தினத்தைக் குறிக்கும் வகையிலான, இந்த விருது பின்னர் ஸ்ரீதேவிக்கு வழங்கப்படும் என்று சென்னையில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையின் முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.