சொந்த நாட்டிற்கே துரோகம் இழைத்த பஷர் அல் அசாத்!! இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் சீர்குலைந்த சிரியா!!  

Photo of author

By Sakthi

Syria-Israel: சிரியா நாட்டில் இருந்து தப்பி செல்ல ராணுவ ரகசியங்களை இஸ்ரேலுக்கு காட்டிக் கொடுத்தது இருக்கிறார் அதிபர்  பஷர் அல் அசாத்.

சிரியா அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்கள் போர் நடத்தி வருகிறது. சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரியாவில் அரசுக்கு எதிராக போர் நடத்தும்  கிளர்ச்சிக் குழுக்களுக்கு சவூதி அரேபியா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

அதிபர் பஷர் அல் அசாத்-க்கு ஆதரவாக ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் உதவி செய்து வருகிறது. சிரியாவில் உள்நாட்டுப் போர் தற்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின்  தலையிட்டால் தீவிரப் போராக மாறியது. கடந்த சில நாட்களுக்கு முன் கிளர்ச்சிக் குழுக்கள் சிரியா நாட்டின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி இருந்தார்கள்.

ஆனால், சிரியா அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவர் ரஷ்ய நாட்டிற்கு தப்பி சென்றார். எனவே சிரியா நாடு முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றது. இந்த நிலையில், இஸ்ரேல் சியாவியாவின் ராணுவ தளவாடங்கள் இருக்கும் பகுதிகளை துல்லியமாக குறி வைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. எது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எலத் தொடங்கி இருக்கிறது.

அதாவது, சிரியா அதிபர் ரஷ்யா நாட்டிற்கு தப்பி செல்லும் போது, ராணுவ ரகசியங்களை இஸ்ரேல் நாட்டிற்கு சொல்லி இருக்கலாம் என தெரிய வருகிறது. அதாவது, இஸ்ரேல் லெபனான் மற்றும் ஈரானுடன் போர் நடத்தி வருவதால் ஈரான் ராணுவத்திற்கு சிரியா போர் உதவி செய் வாய்ப்பு உள்ள எனவே முன்னெச்சரிக்கையாக சிரியா ராணுவத் தளத்தை ஏவுகணை கொண்டு தாக்கி இருக்கிறது இஸ்ரேல்.