முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தந்த ஜனாதிபதி… பொம்மன், பெள்ளியை சந்தித்து பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

0
206

 

முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தந்த ஜனாதிபதி… பொம்மன், பெள்ளியை சந்தித்து பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு…

 

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் முகாமிற்கு வருகை தந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி இருவரையும் சந்தித்து பேசினார்.

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் தாயை பிரிந்த குட்டியானைகள் ரகு, பொம்மி இரண்டும் உள்ளது. அவற்றை பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி இருவரும் பராமரித்து வருகின்றனர். குட்டி யானைகளுக்கும், பழங்குடியின தம்பதி பொம்மன் பெள்ளி இருவருக்கும் இடையே உள்ள பாச உறவை மையமாக வைத்து “தி எலிபென்ட் விஸ்பர்ஸ்” என்ற ஆவணத் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி இருவரும் பிரபலமானார்கள். பல்வேறு தரப்பில் இருந்து பரிசுகளும் பாராட்டுகளும் பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி இருவருக்கும் வழங்கப்பட்டது.

 

சமீபத்தில் தெப்பக்காடு யானைகள் முகாமில் தற்காலிகமாக பணியாற்றி வந்த பெள்ளி அவர்களுக்கு அரசு வேலை வழங்கி தமிழக அரசு சிறப்பு செய்தது. இதையடுத்து ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் தி எலிபென்ட் விஸ்பர்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற யானைக் குட்டிகளை பார்ப்பதற்கும், பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி இருவரையும் சந்திக்கவும் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தருவதாக அறிவிப்பு வெளியானது.

 

அதன்படி ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் இன்று(ஆகஸ்ட்5) டெல்லியில் இருந்து மைசூரு வந்தார். பின்னர் மைசூரில் இருந்து இராணுவப்படை ஹெலிகாப்டர் முலமாக மாலை 3.30 மணியளவில் மசினக்குடி வந்தார். மசினக்குடி வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து வரவேற்பு அளித்தனர். பின்னர்.மசினக்குடியில் இருந்து வாகனம் மூலமாக முதுமலை யானைகள் முகாமிற்கு தெப்பக்காடு சாலை வழியாக வந்து சேர்ந்தார்.

 

யானைகள் முகாமிற்கு வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் அங்கு வரிசையாக நிற்க வைக்கப்பட்ட வளர்ப்பு யானைகளை பார்வையிட்ட ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் அதில் நான்கு யானைகளுக்கு கரும்பு கொடுத்தார். பின்னர் எலிபென்ட் விஸ்பர்ஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற யானைக் குட்டிகள், பொம்மன், பொள்ளி மற்றும் பழங்குடியின பிரதிநிதிகளை திரௌபதி முர்மு அவர்கள் சந்தித்தார்.

 

பின்னர் அங்கு இருந்த 38 யானை பாகன்களை சந்தித்து பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பின்னர் 4 மணியளவில் மீண்டும் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் மீண்டும் சாலை வழியாக வாகனத்தில் மசினக்குடி சென்று பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மைசூரு சென்றார்.

 

Previous articleதூங்கிய பெண்களின் உள்ளங்கால்களை உரசிய வாலிபர்… வீடுகளுக்குள் அத்துமீறியதால் வாலிபர் சிறையில் அடைப்பு… 
Next articleதொலைபேசி வழியாக அர்ச்சனை செய்யும் வசதி இல்லை… பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!