Breaking News

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நிலவரம்! யார் முன்னிலை?

Presidential election vote count results! Who is leading?

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நிலவரம்! யார் முன்னிலை?

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலமானது  வருகிற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது . இதனைத்தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதனையடுத்து அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய நடத்தப்படும் இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.

இதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 11 மணி முதல்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது வரையிலான நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு 2 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் அனைத்தும் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திரௌபதி முர்மு 2,32,400 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அந்தவகையில் திரௌபதி முர்மு 3,78,000 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 வாக்குகளும் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகளில் 72.19% வாக்குகளை திரௌபதி முர்மு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment