இயக்குனர் தரப்பில் அழுத்தமா? பகத் பாசல் கவர் போட்டோவை நீக்கிய காரணமென்ன?

Photo of author

By Anand

இயக்குனர் தரப்பில் அழுத்தமா? பகத் பாசல் கவர் போட்டோவை நீக்கிய காரணமென்ன?

கடந்த சில நாட்களாக மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இதையடுத்து தன்னுடைய கவர் போட்டோவை ஒரே நாளில் மாற்றியுள்ளது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் திரைக்கு வந்த மாமன்னன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின்,வடிவேல் பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

அரசியல் கட்சிக்குள் நிலவும் சாதிய பாகுபாட்டை பேசும் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.நடிகர் வடிவேல் மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.உதயநிதி ஸ்டாலினுக்கு இது தான் கடைசி படம் என்றும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் இப்படம் வெளியானது.இதனைத்தொடர்ந்து இப்படமானது தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. உலக அளவில் 9 வது இடத்தில் இருந்து வருகிறது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக படத்தில் வில்லன் கதாபாத்திரமான ரத்தினவேல் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசிலை அனைவரும் கொண்டாடி வருவது தமிழ் திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் சாதிய பாகுபாட்டுடன் செயல்படும் வில்லனாக காட்ட நினைத்த இயக்குனர் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது போலவே படம் அமைந்திருக்கும். அதே நேரத்தில் பகத் பாசிலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். அந்த வகையில் ஒரு சிலர் அவரை நடிப்பிற்காக பாராட்ட, அதே நேரத்தில் சாதி ரீதியான அமைப்புகள் அவரை தங்கள் தலைவர் போல எடிட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இதை கவனித்த அவர் தன்னுடைய சமூக ஊடக பக்கத்தின் கவர் போட்டோவாக மாமன்னன் படத்தில் தான் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரத்தின் போட்டோவை மாற்றினார். இதை கவனித்த சாதிய ஆதரவாளர்கள் அவருடைய பக்கத்திலும் அவருக்கு ஆதரவான கருத்துக்கள் மற்றும் மீம்ஸ்களை கமெண்ட் செய்து வந்தனர். மேலும் சிலர் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு எதிரான கருத்துக்களையும் கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பகத் பாசில் அந்த கவர் படத்தை உடனடியாக நீக்கியுள்ளார். இதை கவனித்த மாரி செல்வராஜ் ஆதரவாளர்கள் பகத் பாசில் சாதிய அமைப்புகளுக்கு சவுக்கடி கொடுத்ததாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அதே நேரத்தில் தன்னுடைய கதாபாத்திரம் சாதிய ரீதியாக ட்ரெண்ட் ஆவதை பார்த்து கவர் படத்தை மாற்றிய அவர் உடனே நீக்கியது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் வேறு எந்த கவர் போட்டோவையும் வைக்காமல் இருப்பது அந்த சந்தேகத்தை உறுதி செய்துள்ளது. 

இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தரப்பிலிருந்து எதாவது அழுத்தம் தரப்பட்டிருக்கலாம் என்றும் அதனாலே அவர் கவர் போட்டோவை நீக்கியுள்ளார் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.