ரிலைன்ஸில் மட்டும் முந்தைய பால் விலை! வெட்டவெளிச்சமான தமிழக அரசின் சதி.. ஆவினுக்கு சப்ளையை நிறுத்தம் செய்யும் பால் முகவர்?
பாலின் கொள்முதல் விலையை உயர்த்தும்படி பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் கோரிக்கை வைத்தது. இதனை அடுத்து தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஆவினில் வழங்கப்பட்டு வரும் ஒரு லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தியது. இது ஆரஞ்சு நிற பாக்கெட்டிற்கு மட்டும் பொருந்தும் என தெரிவித்தனர். ஆவினைத் தொடர்ந்து ஆரோக்கியாவும் பால் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஆவினின் ஆரஞ்சு நிற பாக்கெட்டின் விலை 60 ஆக விற்று வருகின்றனர். ஆனால் ரிலையன்ஸ் ஸ்மார்ட்டில் மட்டும் பழைய விலைக்கு விற்கின்றனர். கோவையில் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் ஸ்மார்ட் கடைகளில் மக்களுக்கு பழைய விலைக்கு ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதனையடுத்து இதனை உறுதி செய்ய தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் ரிலையன்ஸ் ஸ்மார்ட் கடைகள் அனைத்தும் பழைய விலைக்கு பால் வழங்கி வந்தது அம்பலமானது. இதை வைத்துப் பார்க்கையில் ஆவின் நிறுவனமானது ரிலையன்ஸ் உடன் இணைந்து விட்டதா? அல்லது ஆவினை ரிலைன்ஸ் வாங்கிக் கொண்டதா என பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். ஒரு லிட்டர் பால் விலை 60 என விற்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு கமிஷனாக ரூ.2 லாபம் நிற்கும். ஆனால் 12 ரூபாய் வித்தியாசத்தில் எவ்வாறு பால் வினியோகம் செய்ய முடியும்.
இது நுகர்வோர்களுக்கு செய்யும் அநீதி. அனைவருக்கும் ஒரே மாதிரியான தொகையை நிர்ணயித்தால் மட்டுமே பால் கொள்முதல் விலை சீராக இருக்கும். இதை தவிர்த்து ரிலையன்ஸ்-க்கு ஒரு விலை நிர்ணயித்து வழங்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆவினை உபயோகிக்கும் பல முகவர்களுக்கு தமிழ்நாடு அரசு இவ்வாறு செய்வது குற்றமானது. இவ்வாறு தமிழக அரசு தொடர்ந்து செய்து வந்தால் ஆவினுக்கு பால் வழங்குவதை நாங்கள் ரத்து செய்வோம் என பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கத் தலைவர் கூறியுள்ளார். இல்லையென்றால் தற்பொழுது ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வரும் பால் மற்றும் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.