உயரப்போகும் அன்றாட உணவு பொருட்களின் விலைகள்!! அதிர்ச்சியில் மக்கள்!!

Photo of author

By Gayathri

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ( HUL ), கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் ( GCPL ), ஐடிசி மற்றும் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் ( TCPL ) போன்ற பெரிய நிறுவனங்களில் விற்பனை அளவு குறைந்து வருவதால் விலை உயர்ந்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனங்களில் பணவீக்கம் ஏற்படும் நிலை உள்ளதாலும் சில உணவுப் பொருட்களின் விலைகள் உயரப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் நாம் அன்றாட பயன்படுத்தும் டீ, பிஸ்கட், சமையல் எண்ணெய் மற்றும் ஷாம்பு போன்ற பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு விலை உயர்வதற்கு முக்கிய காரணமாக உற்பத்தி செலவு மற்றும் பணவீக்கம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாத அளவிலான எஃப்எம்சிஜி நிறுவனங்களின் விற்பனை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எஃப் எம் சி ஜி நிறுவனங்கள் என்பது நுகர்வோர்களுக்கு பாக்கெட்டுகள் மூலம் குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்கும் நிறுவனமாகும்.

இந்நிறுவனம் கடந்த காலாண்டில் வணிக ரீதியாக பின்வாங்கியுள்ளது. இதனால் தான் அதனுடைய விற்பனை என்பது மிகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பாமாயில், காபி மற்றும் கோகோ போன்ற மூலப் பொருட்களின் விலைகள் சமீபத்திய வாரங்களில் அதிகரித்திருக்கிறது.

இவை மட்டுமின்றி மேலும் சில எஃப்எம்சிஜி நிறுவனத்தின் பொருட்களான டீ, பிஸ்கட், சமையல் எண்ணெய், ஷாம்பு போன்ற அன்றாட பொருட்களின் விளையும் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விலையேற்றம் குறித்து நிபுணர்கள் கூறுகையில், எஃப்எம்சிஜி துறையின் மொத்த விற்பனையில் இருந்து 65 முதல் 68 சதவிகிதம் நகர்புறங்களில் இருக்கிறது. அதற்கு மாறாக நகர்ப்புற சந்தைகளுடன் அதனை ஒப்பிட்டுப் பார்க்கையில் கிராமப்புற சந்தைகள் தங்கள் வளர்ச்சி விகிதத்தை தக்க வைத்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறுகிறார்கள்.

மேலும் சமையல் எண்ணெயின் விலை உயர அதன் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்ததே காரணம் என்றும் தெரிகிறது. சோயா பீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் இறக்குமதி வரியை 5.5 சதவீதத்திலிருந்து 27.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல சமையல் எண்ணெய் மீதான வரியும் 13 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.