திருப்பதி ஏழுமலையானுக்கு குடியுரிமை கேட்ட அர்ச்சகரால் பரபரப்பு

Photo of author

By CineDesk

திருப்பதி ஏழுமலையானுக்கு குடியுரிமை கேட்ட அர்ச்சகரால் பரபரப்பு

CineDesk

Updated on:

திருப்பதி ஏழுமலையானுக்கு குடியுரிமை கேட்ட அர்ச்சகரால் பரபரப்பு

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் அருகே சில்கூர் என்ற பகுதியில் பாலாஜி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்று பாஸ்போர்ட்டை வைத்து வழிபட்டால் உடனே விசா கிடைக்கும் என்று அந்தப்பகுதியில் உள்ளவர்களின் நீண்டநாள் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இந்த பெருமாளுக்கு ’விசா பாலாஜி’ என்று பெயர் வந்துள்ளது.

இந்த நிலையில் இந்த பெருமாளுக்கு சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்த கோவிலின் அர்ச்சகர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடவுள்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. எனவே அர்ச்சகர் தான் நீதிமன்றத்தின் மூலம் பிரதிநிதித்துவம் பெற முடியும். எனவே திருப்பதி ஏழுமலையான், சில்கூர் பாலாஜி, ஐயப்ப சாமி, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி உள்ளிட்ட அனைத்து இந்து தெய்வங்களுக்கும், புதிய திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் பிரிவு 5(4)-ன் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும்.

அனைத்து தெய்வங்களையும் குடிமக்களாக அரசு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த கோரிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.