புரோகிதர் திருடிய தாலி! மணப்பெண்ணுக்கு நடந்த கதி என்ன?

Photo of author

By Hasini

புரோகிதர் திருடிய தாலி! மணப்பெண்ணுக்கு நடந்த கதி என்ன?

வீடு புகுந்து திருடும் திருடர்களை பார்த்திருப்போம், அல்லது பசியின் கொடுமைக்கு சிறு சிறு திருட்டுகளை செய்பவர்களை பார்த்திருப்போம்.

ஆனால் திருமண சடங்குகளை செய்ய வந்த ப்ரோகிதர் கூட திருமண பெண்ணின் தாலியை திருடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ப்ரோகிதர் ஒருவர் தெலுங்கானாவில் உள்ள தும்ரானில் கடந்த 16ந்தேதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு, வேத மந்திரங்கள் முழங்க திருமணம் செய்து வைத்துள்ளார்.. அப்போது பெண்ணின் தாலி மற்றும் தாலி செயினில் கோர்க்கக் கூடிய தங்கமணி குண்டுகள் என அனைத்தையும் மண மேடையில் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.அந்த சமயத்தில்இந்த புரோகிதர் தங்க குண்டுமணிகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டுள்ளார்.

தாலியில் தங்கமணிக் குண்டுகள் இல்லாததைக் கண்டு திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.அனைவரும் பதற்றமடைந்து தேடும் போது திருமண வீடியோவில் புரோகிதர் தங்கமணி குண்டுகளை தனது பாக்கெட்டில் போடுவது தெளிவாக பதிவாகி இருந்தது. இதை அடுத்து அவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

வீடியோவையே ஆதாரமாக வைத்து போலீசார் திருமண மண்டபத்தில் கைவரிசை காட்டிய புரோகிதரை வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.