இந்துக்கள் மற்றும் பாரதமாதவை இழிவாக பேசிய பாதிரியார்! போலீசாரின் அதிரடி!

Photo of author

By Hasini

இந்துக்கள் மற்றும் பாரதமாதவை இழிவாக பேசிய பாதிரியார்! போலீசாரின் அதிரடி!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், ஆளும் கட்சியையும், பாரத மாதாவையும், பிரதமர் மோடியையும், பற்றியும், இந்து கடவுள்களை பற்றியும் மிகவும் இழிவாக பேசி இருந்தார். கேரள மக்களையும் கொச்சை படுத்தி பேசி வந்தார். கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவாளர்களினால் மட்டுமே திமுக வெற்றி பெற்றது என்றும், அவதூறு பேசினார்.

பிரதமரும், அமீத்ஷாவும் பின்னாளில் இப்படி போக வேண்டும் என்றும் சாபமெல்லாம் விட்டு இருந்தார். அமைச்சர் சேகர் பாபுவையும் இழிவாக பேசி இருந்தார். இவர் மீது பலர் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த பாதிரியாரோ தலைமறைவாகி விட்டார். அதன் காரணமாக கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில், மதபோதகர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து, சிறையில் அடைக்க குளித்துறை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரதமாதா மற்றும் நாட்டின் தலைவர்களை விமர்சித்த வழக்கில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.