ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்!

Photo of author

By Parthipan K

குஜராத் மாநிலத்தில் உள்ள கெவாடியாவில், ஒற்றுமை தினவிழாவை முடித்த பிறகு, அங்கிருந்தே இன்று காலை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தேசத்தின் நலனை கருத்தில் கொண்டு செயலாற்றும் படி  அறிவுறுத்தினார்.

ஐஏஎஸ் பயிற்சி காலத்தை முழுமையாக முடித்து விட்டு அரசு அதிகாரிகளாய் செயல்பட தயாராக இருக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அனைத்து அதிகாரிகளுக்கும் சிறப்புரை வழங்கினார். 

அப்போது மக்கள்தான் அரசு அதிகாரத்திற்கு உடைய  உண்மையான உந்துசக்தி என்பதை குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி ஜ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் தலையீட்டை குறைத்துக் கொள்ளும்படியும், சாதாரண மக்களுக்கு அதிகாரம் அழிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அவர் இரண்டு விஷயங்களை அந்த அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார். அது என்னவென்றால், “குறைந்தபட்ச அரசு என்பதையும் நிறைவான நிர்வாகம் என்பதையும் ஐஏஎஸ் அதிகாரிகளான நீங்கள் மந்திரமாக கொண்டு செயல்படும்படி வலியுறுத்தியுள்ளார்”.