தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Photo of author

By Anand

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Anand

Prime Minister Modi Meet Prime Minister of Japan Shinzo Abe-News4 Tamil Latest Online Tamil News Today

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தாய்லாந்து நாட்டில் நடைபெறும் 16வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி ஜப்பான் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு, கிழக்கு ஆசிய உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றிருக்கிறார். இந்நிலையில் ஆசியான் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், அடுத்து கிழக்கு ஆசிய உச்சி மாநாடு நடந்தது.

நடந்து முடிந்த ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளுக்கு இடையே பிரதமர் மோடி பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். அந்த வகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயையும் நேற்று காலையில் சந்தித்து பேசியிருக்கிறார்.

அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். மேலும் மியான்மர் தலைவர் ஆங்சான் சூகியையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைப் போல ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை சந்தித்த பிரதமர் மோடி, இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் பற்றியும் அவருடன் விவாதித்தார்.

பின்னர் வியட்நாம் பிரதமர் நுயன் ஜுவான் பக்கையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.