சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பதாக சுட்டிக்காட்டுகிறார் – பிரதமர் மோடி!

Photo of author

By Parthipan K

சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பதாக சுட்டிக்காட்டுகிறார் – பிரதமர் மோடி!

Parthipan K

பீகார் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மூன்று இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், “சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை மக்கள் தண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்”.

மேலும் இப்போதாவது காங்கிரஸ் மக்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அத்துடன்  மாநிலங்களவை, மக்களவை ஆகிய இரண்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.பி கள் கூட இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவி வரும் இத்தகைய சூழ்நிலையிலும் மக்கள் வாக்களிக்க வந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, வாக்களிப்பது என்பது ஜனநாயகத்தின் வலிமை என்பதை உணர்த்தினார்.

இந்திய மக்கள் அனைவருக்கும் வாக்களிப்பதின் மகத்துவம் தெரிந்து உள்ளதாகவும், இளைஞர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் ஜனநாயகம் எந்த அளவிற்கு வேரூன்றி உள்ளது என்பதையும், மக்கள் தற்போது வாக்களிப்பதை வைத்து புரிந்து கொள்ள இயலுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி.

மேலும் பீகார் மாநிலத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, அங்கு வாழும் மக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் அவர்களை காப்பதற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.