தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் – பாரதியாரின் பாடல் வரிகளை பாடினார்!

0
153

இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். குஜராத் மாநிலத்தின் நீர்வழி விமானத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலை ‘ஒற்றுமை சிலை’ என்று அழைக்கப்படுகிறது. அந்த பிரம்மாண்டமான சிலைக்கு பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை உற்சாகத்துடன் ரசித்தார். 

அதன்பின் மக்களிடம் பேசிய பிரதமர் மோடி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி, அந்த வரிகளை தமிழில் பாடினார். அதை தொடர்ந்து இந்தி மொழியில் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.  

அவர் பாடிய பாடல் என்னவென்றால், “மன்னும் இமயமலை எங்கள் மலையே, மாநிலமீதிதுபோல் பிரிதில்லையே”என்று தொடங்கி “பாரத நாடு பழம்பெரும் நாடே, பாடுவம் இதை எமக்கில்லை ஈடே” என்ற பாடலின் 8 வரிகளை தமிழில் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தமிழ் மொழி நாட்டில் பழமையான மொழி என்றும் அந்த மொழியிலே பாரதியார் நாட்டு வளத்தினை புகழ்ந்துள்ளார் என்றும் பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார். இதேபோன்று சுதந்திர தின விழா அன்றும் பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleடாஸ் வென்ற ஐதராபாத் அணி! ஆட்டத்திலும் வெல்லுமா! விறுவிறுப்பான தொடக்கம்
Next articleதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது – மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு!