சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்!

0
134

சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை, நாம்  ‘தேசிய ஒற்றுமை தினமாக’ கொண்டாடுகிறோம். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ஒரு பிரம்மாண்ட சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி அவர்கள் மலர் தூவி மரியாதை செய்தார். அப்பொழுது, அங்கு ஏற்பாடு செய்திருந்த கலை  நிகழ்ச்சிகளை தாளம் போட்டும், முழு உற்சாகத்துடனும் ரசித்தார். அத்துடன் ஒற்றுமை தின சிறப்பு பேரணியை  துவங்கி வைத்து அவற்றை பார்வையிட்டார்.

உலகத்தின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவரின் சிலை, ‘ஒற்றுமை சிலை’ என்றழைக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் கவடியா  பகுதியில் ஓடும் நர்மதா ஆற்றில் அமைக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி, அகமதாபாத்தில் உள்ள சபர்மதியிலிருந்து, நர்மதா வரை நீர்வழி விமானத்தில் வந்தார். இந்த விமானம் இந்தியாவில் முதல் முறையாக இன்று பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய மோடி கூறியது என்னவென்றால் : ” இந்தியாவை ஒரே நாடாக ஒருங்கிணைந்து ஒற்றுமைபடுத்தியவர் என்றும் இந்தியாவினுடைய முதல் உள்துறை அமைச்சர் என்றும்  சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களை புகழ்ந்துள்ளார்”. 

அதுமட்டுமன்றி பிரதமர் மோடி, “புல்வாமா தாக்குதல் நடந்ததற்காக சிலர் அதற்கு வர்த்தம் அடையாமல், அவற்றை வைத்து அரசியல் செய்வது தவறானது என்று கண்டனம் தெரிவித்தார். அதை தொடர்ந்து பேசிய அவர், தேசத்தின் நலன் பற்றிய விஷயங்களில் அரசியல் செய்யாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்வதாக” கூறினார்.

Previous articleவாலிபரோடு தகாத உறவு! கணவனுக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த பெண்!
Next articleஇந்தியாவில் முதன்முறையாக நீர்வழி விமான பயணம் – பிரதமர் துவக்கி வைத்தார்!