இந்திய – சீன எல்லையான லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு!

0
119

இந்திய சீன எல்லைப் பகுதியான
லடாக்கில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
லடாக் பகுதியில் உள்ள லேவில் தற்பொழுது நிலமையை ஆய்வு செய்து வருகிறார்.கிழக்கு லடாக் பகுதியில் இந்திய பகுதியை சீனா ஆக்கிரமிப்பு செய்ததால் இந்தியா சீனா இடையே கடும் மோதல் ஏற்பட்டு இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.இதன் காரணமாக இந்தியா சீனா எல்லையில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

சீனாவிற்கு வர்த்தக ரீதியில் பதிலடி கொடுக்க முடிவு செய்த இந்தியா சீனாவின் 59 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.இந்த மொபைல் செயலிகளில் டிக்டாக் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கையை தொடர்ந்து உலக நாடுகளும் சீனா மீது நடவடிக்கை எடுக்க தயாராகியுள்ளனர்.மேலும் சீனாவிற்கு இந்தியா உடனான மோதல் மட்டுமின்றி மற்ற அண்டை நாடுகளுடனும் மோதலில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் சீனாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஏற்கனவே அமெரிக்கா சீனாவுடன் வர்த்தக ரீதியான மோதலில் ஈடுபட்டு வருகின்றது.இதனால் சிலிக்கான் வேலியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும், செனட் எம்பி.க்களும் இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் சீனா ஆப்களுக்கு தடை விதிக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் எல்லைப்பகுதியில் பதற்றமான நிலை இருப்பதால்,ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து போர் விமானங்கள்,ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை 38,900 கோடிக்கு வாங்க பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.இந்நிலையில் லடாக் பகுதியில் பிரதமர் மோதி ஆய்வு செய்து வருவது போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதொட்டியை சுத்தம் செய்த 4 பேர் மரணம்! உடல்களை டிராக்டரில் கொண்டு சென்ற அவலம்!
Next articleஅரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை!!! கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!