பிரதமர் மோடியின் உரையாடல்! மின்சாரம் வழங்குவது அரசின் பொறுப்பு!

பிரதமர் மோடியின் உரையாடல்! மின்சாரம் வழங்குவது அரசின் பொறுப்பு!

நேற்று சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் அப்போது அவர் மக்களிடையே உரையாற்றினார். அந்த உரையில் மக்களாக இருந்தாலும் சரி காவல்துறையினராக இருந்தாலும் சரி ஒவ்வொருவரும் தங்களின் கடமைகளில் இருந்து தவறக்கூடாது எனவும் கூறினார்.

மேலும் 24 நேரமும் மின்சாரம் வழங்க முயற்சிப்பது அரசின் கடமை ஆனால் அந்த மின்சாரத்தை மக்கள் அனைவரும் முறையாக சேமித்து வைப்பது மக்களின் பொறுப்பு எனவும் கூறினார். மேலும் ஒவ்வொரு வயலுக்கும்  பாசனத்திற்கு தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்வது அரசன் கடமையாக இருந்தாலும் சிறு துளி நீருக்கு அதிக பயிர் என்ற நீர்ப்பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறினார் .

மேலும் ரசாயனம் மற்ற விவசாயம் இயற்கை விவசாயம் செய்வது மக்களின் கடமை என்றும் கூறினார். மேலும் இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்கான கடமைகளை நிறைவேற்றினால் எதிர்பார்த்த முடிவுகளை முன்கூட்டியே அடையும் என்றும் நம்புவதாகவும் மேடையில் பேசினார்.

Leave a Comment