என்னுடைய நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

உலக அரசியல் வரலாற்றில் ஒருவர் தேர்தலில் நின்று மக்கள் செல்வாக்குடன் அடுத்தடுத்து ஆட்சியை தொடர்ந்து பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அப்படி தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்சியை பிடித்தவர்கள் வெகுசிலரே அந்தவகையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் 2 முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி இராமச்சந்திரன். அதேபோல ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. ராமராவ் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதா உள்ளிட்டோர் அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

அதேபோல தேசிய அளவில் பார்த்தோமானால் காங்கிரஸ் கட்சி 2 முறை ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றியிருக்கிறது அதைவிடுத்து தற்சமயம் ரம இருக்கக்கூடிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரையில் நடைபெற்ற 2 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறார்.

உலக அரசியல் வரலாற்றை உற்று நோக்கினால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இதேபோன்று தொடர்ந்து இரண்டு முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரஷ்யாவை பொருத்தவரையில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் அதிபராக விளாடிமிர் புட்டின் தொடர்ந்து வருகிறார்.

அந்த வகையில், கடந்த 2017ஆம் வருடம் பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் வெற்றி பெற்றார். கடந்த 4 ஆண்டுகாலமாக அவர் பிரான்ஸ் அதிபராக தொடர்ந்து வந்தார்.

தற்போது அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 2 மாத காலமேயிருப்பதால் தற்போது மீண்டும் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மீண்டும் இமானுவேல் மேக்ரான் அவர்களே வெற்றி பெற்று அதிபர் பதவியை கை பெற்றிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மறுபடியும் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

2வது முறையாக அதிபராக பதவியேற்கவுள்ள இமானுவேல் மெக்ரானுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு என்னுடைய நண்பர் இமானுவேல் மேக்ரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாசுக்களிடையே முறையான செயல் திட்ட கூட்டணியை ஆழப்படுத்தும் விதத்தில் நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவதை தொடர வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.