குளிர் காலம், வெயில் காலம், மழைக் காலம் போல தற்போது கொரோனா காலமாக மாறியுள்ள நிலையில், 3 தடுப்பு நடவடிக்கைகளை நாம் பின்பற்றி வருகிறோம். அதில் முதலாவதாக “முகக் கவசம்” அணிவது இரண்டாவது “கைகளை அடிக்கடி நன்கு கழுவுதல்” மூன்றாவதாக சமூக இடைவெளி.
மக்கள் வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது அரசின் ஆணை மற்றும் மக்கள் நலன் கருதியே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டாயமாக மாற்றுவதற்காக முகக்கவசம் அணிய வில்லை என்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வரைமுறை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் மாறாக ‘ஜெர்மனியில்’ ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டுப் பிரதமர் “ஏஞ்சலா மெர்க்கல்” அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்திற்கு சென்றுள்ளார். அவரின் உரை முடிந்த பின்பு நினைவிற்கு வந்துள்ளது அவர் முகக்கவசம் அணியவில்லை என்று, அடுத்த நிமிடமே முகக்கவசத்திற்காக முகத்தில் பரபரப்புடன் மாஸ்க்கை தேடியுள்ளார்.
இந்நிகழ்ச்சி அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சில நொடிகளிலேயே கொரோனா வைரஸை போல வைரலாக பரவி வருகிறது.