பிரதமரின் ரோஜ்கார் மேளா திட்டம்! 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!!

0
145
#image_title

பிரதமரின் ரோஜ்கார் மேளா திட்டம்! 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிமுகப்படுத்திய ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் இன்று(நவம்பர்30) மேலும் 51ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கவுள்ளார்.

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்தியில் பாஜக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசில் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான திட்டமான ரோஜ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வைத்தார்.

ரோஜ்கார் மேளா திட்டம் தொடங்கப்பட்ட பொழுது முதல் கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு இடங்களில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய மந்திரிகள் வழங்கினர்.

இதையடுத்து இரண்டாவது கட்டமாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து மேலும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று(நவம்பர்30) காணொலி மூலமாக 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழங்கவுள்ளார்.

வருவாய்த்துறை, ரெயில்வே அமைச்சகம், அஞ்சல்துறை, உள்துறை அமைச்சகம், பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை, உயர்கல்வித்துறை, குடும்பநல அமைச்சகம் போன்ற பல்வேறு வகையான அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 51 ஆயிரம் பேருக்கு கண்ணகி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பணி நியமன ஆணையை இன்று(நவம்பர்30) வழங்குகின்றார்.

மத்திய அரசில் புதிதாக பணிக்கு சேரும் நபர்களுக்கு https://portal.igotkarmayogi.gov.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி 800க்கும் அதிகமான மின்கற்றல் படிப்புகளை படித்துக் கொள்ளவும் தங்களுடைய திறன்களை வளர்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்! இன்று வாக்குப்பதிவு தொடங்கியது!!
Next articleஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!!