பிரின்ஸ் திரைப்படம் இவ்வளவு நஷ்டம் வரும்… இப்போதே வெளியான அதிர்ச்சி தகவல்!

Photo of author

By Vinoth

பிரின்ஸ் திரைப்படம் இவ்வளவு நஷ்டம் வரும்… இப்போதே வெளியான அதிர்ச்சி தகவல்!

Vinoth

பிரின்ஸ் திரைப்படம் இவ்வளவு நஷ்டம் வரும்… இப்போதே வெளியான அதிர்ச்சி தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் கடந்த 21 ஆம் தேதி வெளியானது.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மற்றும் டான் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதையடுத்து ஹாட்ரிக் வெற்றி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இந்த முறை சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் ரிலீஸ் ஆனது. இதில் பிரின்ஸ் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ரிலீஸுக்கு பின்னர் நிலைமை தலைகீழாகியுள்ளது.

ஜதி ரத்னலு திரைப்படத்தின் கவனம் ஈர்த்த இயக்குனர் அனுதீப் ப்ரின்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மிகக் குறுகிய கால படமாக  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதனால் ரிலீஸூக்கு முன்பே இந்த படத்துக்கு நல்ல லாபம் பார்த்தது. இந்த படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் கைப்பற்றினார்.

மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றப் பட்ட இந்த படத்தை ரிலீஸ் செய்த பின்னர் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்நிலையில் நேற்றோடு தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்துள்ள நிலையில் வசூல் சொல்லிகொள்ளும் படி அமையவில்லை என்று திரைவட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இதனால் விநியோகஸ்தரான அன்புச் செழியனுக்கு 10 கோடி ரூபாய் வரை நஷ்டமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரின்ஸ் படத்தில் ரிலீஸுக்கு முன்பாகவே 12 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டது. அப்படி ட்ரிம் செய்யப்பட்டும் இந்த படம் ரசிகர்களைக் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் போலவே ஆந்திராவிலும் இந்த படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது.