தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை – ஆளுநர் அறிவிப்பு!

0
115

தமிழகத்தில் திமுக பல இடங்களில் வெற்றி பெற்று வந்த நிலையில் ஒரு மாதமாக திமுக ஆட்சியை நடத்தி வருகிறது ஈடுபட்ட நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து உதவும் வகையில் பயன்படுத்தப்படுகிறது.

அனைத்து அமைச்சர்களும் தம் தம் வேலைகளை சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 16ஆவது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

அதில் ஆளுநர் பன்வாரிலால், சபாநாயகர் மு அப்பாவோ ஆகியோரை வரவேற்றனர். இதையடுத்து ஆளுநர் தனது உரையை தொடங்கினார்.

முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறினார். இந்த கூட்டத்தில் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று உள்ளனர். அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.

1. தமிழ் மொழியில் மிகவும் இனிமையான மொழி என்று புகழாரம்.
2. 16 சட்டமன்றத்துக்கு தேர்வான உறுப்பினர்களுக்கு வாழ்த்துக் கூறினார்.
3. தமக்கு வாக்களித்த வாக்களிக்காத வரென பாரபட்சமின்றி மக்களுக்கு வழங்க வேண்டும் சமூக நீதி சமத்துவத்தை அடித்தளமாகக் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என்று கூறினார்.
4. இந்திய அலுவலக மொழியாக தமிழை மாற்ற வேண்டும்.
5. மூன்றாவது அலையை சமாளிக்க ரூ 50 கோடி ஒதுக்கப்படும்.
6. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 335 கோடி குவிந்துள்ளது.
7. ஈழ தமிழர்களுக்கு சம குடியுரிமை அரசியல் உரிமைகளை உறுதிசெய்ய இலங்கை அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும்.
8. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களை திருத்தங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படும்.
9. பொருளாதார மந்தநிலையை போக்கும் வகையில் அரசுக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழுவில் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழக பேராசிரியர் டப்லோ குழுவில் இடம் பெறுவார்.
10. நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்.
11. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி போதுமானதாக இல்லை.
12. அட்டைதாரர்களுக்கு 4000 கொடுத்தது மிகவும் சிறப்பானது.
13. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும்.
14. மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.
15. மீனவர்களுக்காக துறை அமைக்கப்படும்.
16. சிங்காரச் சென்னை உருவாக்கப்படும்..
17. அண்ணா நினைவகம் புதுப்பிக்கப்படும்.
18. கலைஞர் நூலகம் அமைக்கப்படும் மதுரையில்.
19. இந்திய அலுவலகங்களில் முறையில் தமிழ் மொழியை வலியுறுத்த வேண்டும்.
20. துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
21. மீனவர் நலனை பாதுகாக்கும் பொருட்டு தேசிய ஆணையத்தை அமைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும்.
22. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற தேவையான சட்டங்களை இயற்றப்படும்.
23. தமிழ் வழியில் பயின்ற அவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
24. 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
25. சென்னை மதுரவாயல் துறைமுகம் அமைக்கப்படும்.
26. விரைவு போக்குவரத்து திட்டம் அமல்படுத்தப்படும்.
27. பெண்களுக்கு மாநிலம் முழுவதும் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.