சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.
அந்த சிறைச்சாலையில் கைதிகளால் அமைக்கப்பட்டுள்ள தோட்டத்தை பார்வையிட்ட பிறகு தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமான போது 20க்கும் மேற்பட்ட கைதிகள் தமிழிசை சௌந்தரராஜன் காலில் விழுந்து தங்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலை அமைந்திருக்கிறது அங்கே விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என்று சுமார் 250 க்கும் மேற்பட்ட கைகள் இருக்கிறார்கள். அவர்கள் சிறை வளாகத்தில் இயற்கையான முறையில் தோட்டத்தை ஏற்படுத்திய உணவு தானியங்களை சாகுபடி செய்து வருகிறார்கள் .
அதோடு பழங்களையும் சாகுபடி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் நினைவாக மரம் செடி கொடிகளுடன் இந்த தோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த தோட்டத்தை புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று திறந்து வைத்திருக்கிறார்.
அப்போது சிறை வளாகத்தில் தாங்கள் அமைத்து பராமரித்து வருகின்ற தோட்டத்தை அந்த கைதிகளை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சுட்டிக்காட்டி என்னென்ன சாகுபடி செய்யப்படுகிறது என்பதை விளக்கி தெரிவித்தார்கள். இந்த தோட்டத்தை சிறப்பான முறையில் ஏற்படுத்தி காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்து வரும் கைதிகளை புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெகுவாக பாராட்டினார்.
அதன் பிறகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்து புறப்பட்டபோது அவருடைய காலில் விழுந்து கைதிகள் கதற தொடங்கினார்கள். ஆயுள் தண்டனை கைதிகளான 27 பேர் தண்டனை காலம் முடிவடைந்தும் விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் தங்களுடைய குடும்பத்தினர்களுடன் சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பை வழங்குமாறு தெரிவித்து அவர்கள் கண்ணீருடன் கெஞ்சியது அங்கு இருந்தவர்களை மனம் கலங்க வைத்தது.
அதோடு சமுதாயத்தில் நல்ல முறையில் வாழ எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். நல்ல முறையில் எங்களுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்வோம். கடைசி வாய்ப்பு தங்களுடைய கையில் தான் இருக்கிறது என்று கைதிகள் தமிழிசையிடம் கைகூப்பி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அவர்களுக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், உங்களுடைய கோரிக்கைக்கு சரியான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கைதிகளை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்தவர்கள் இடையே நெகிழ்ச்சியை உண்டாக்கியது.
அவர்களுடைய கோரிக்கையை தொடர்பாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, சுதந்திர போராட்ட காலத்தில் சிறைச்சாலைகளில் வதைக்கப்பட்டு கிடந்தார்கள்.
இன்று விதை போட்டு தோட்டம் அமைக்கிறார்கள். இதனை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே தோட்டம் முதலில் சிறிதாக இருந்தது. தற்போது அது விரிவடைந்து கொண்டே செல்கிறது. பசுமையான சூழ்நிலையில் இருக்கும் போது கைதிகளின் மனநிலையிலும் மாற்றம் உண்டாகிறது.
இது உளவியல் ரீதியாக மனநலம் சார்ந்தது. அவர்களுடைய அநேக கோரிக்கைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.