விஷாலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சந்தித்த லோகேஷ்… அப்ப கன்பார்ம்தான்!

0
70

விஷாலை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சந்தித்த லோகேஷ்… அப்ப கன்பார்ம்தான்!

விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்தில் விஷால் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஷால். ஆனால் சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் ஓடுவதில்லை. கடைசியாக அவர் நடித்த சில படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. இப்போது லத்தி மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் இயக்கத்தில் அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் பிரதான வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்துவது போல, லோகேஷ் கனகராஜ் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் இருந்த விஷாலை சென்று சந்தித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லோகேஷ் தான் இயக்கிய மாஸ்டர் மற்றும் கைதி ஆகிய படங்களில் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைத்தார். அந்த இரு படஙளில் அவரின் கதாபாத்திரங்கள் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தன.

விஜய் நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆகும் வாரிசு திரைப்படத்தை விட இந்த தளபதி 67 படத்துக்குதான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.