நீல நிற புடவையில் பளிச்சென்று போஸ் கொடுத்த சூர்யா பட இயக்குனரின் மனைவி, புகைப்படம் உள்ளே…..

Photo of author

By Parthipan K

நடிகர் சூர்யாவின் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சிங்கம். சூர்யா, அனுஷ்கா, விவேக், ராதா ரவி, பிரகாஷ்ராஜ், விஜயகுமார், சுமித்ரா, பிரியா அட்லீ நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் எடுக்கப்பட்டன.

இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் ஹரி ஆவார். ஹரி நடிகர் விக்ரமை வைத்து சாமி திரைப்படத்தை இயக்கியவர்.

இவருடைய மனைவி ப்ரீத்தா ஹரி, 80 90 களின் இறுதியில் ப்ரீத்தா திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் மூன்று மகன்கள் உள்ளனர்.

ப்ரீத்தா ஹரி பழம்பெரு நடிகர்களான விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியினரின் இரண்டாவது மகள் ஆவார்.

இவர் இப்போது சினிமாவை வாழ்வை விட்டு முற்றிலுமாக ஒதுங்கிவிட்டார். எனினும் இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருடைய புடவை கலெக்ஷன்களை பார்க்கவே பெண் ரசிகைகள் இவரை பின் தொடருகிறார்கள்.

வருடந்தோறும் ப்ரீத்தா ஹரி நவராத்திரியை வெகு விமர்சையாக கொண்டாடுவார், 9 நாட்களும் அந்தந்த நாட்களுக்கு உகந்த புடவை மற்றும் மேட்ச் அணிகலன்கள் அணிந்து புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமில் பதிவிடுவார்.

அதன்படி இன்று நீல நிற புடவையில் பளிச்சென்று போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ப்ரீதாஹரி புகைப்படத்தை காண்க:

https://www.instagram.com/p/CU-CC9tJuel/