இங்கிலாந்து டெஸ்ட்க்கு அழைக்கப்பட்ட முக்கிய வீரர்கள்! திடீரென ஏற்பட்ட சிக்கல்!

0
162

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான போட்டியில் விளையாடுவதற்கு பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் இலங்கையிலிருந்து இங்கிலாந்து செல்ல இருக்கிறார்கள் ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.

இந்திய அணி வெற்றி பெறுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் ஒரு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சப்மன் கில் காயத்தால் பாதிக்கப்பட்டார். அதேபோல இந்திய அணிக்கு முதல் தர பயிற்சி கொடுப்பதற்காக கவுண்டி அணிகளுடன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டியின்போது வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் காயமடைந்தார்கள். இதன் காரணமாக இந்த வீரர்களும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இந்த மூன்று வீரர்களுக்கு பதிலாக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. பிசிசிஐ இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. பிரித்வி ஷா மற்றும் சூரியகுமார் யாதவ் உள்ளிட்டோர் இலங்கை தொடரில் தற்சமயம் பங்கேற்றிருக்கிறார்கள். 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் முடிவடைந்து இருப்பதால் அவர்களின் போட்டி தேதிகளில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இருந்தாலும் நோய்த்தொற்று பரவல் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக, அவர்களுடைய பயணத்தை தடை செய்ய வாய்ப்பிருக்கிறது. சமீபத்தில் நடந்த இலங்கை தொடரின் சமயத்தில் இந்திய வீரர் குணால் பாண்டியா அவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்திய அணியில் 8 வீரர்கள் தண்ணீர் படுத்தப்பட்டார்கள். இதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ப்ரித்விஷா உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தார்கள்.

அவர்கள் இருவரும் இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் இரு வீரர்களுக்கும் மூன்று முறை நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு முற்றிலுமே எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று முடிவுகள் வெளிவர வேண்டும். ஆகவே இன்னும் மூன்று தினங்களுக்குள் சூர்யகுமார் யாதவ் மற்றும் ப்ரித்விஷா ஆகிய இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு அதில் தோற்று இல்லை என்று முடிவு வருமா என்பதே சந்தேகம் என்று சொல்லப்படுகிறது.

Previous articleகள்ளழகர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!
Next articleமனு கொடுக்க வந்தவர்களிடம் சாப்பிட்டு போக பணம் கொடுத்து அனுப்பிய பாமக எம்.எல்.ஏ! குவியும் பாராட்டு