டெல்லி மற்றும் பீகார் சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ.க தோற்கும் – காங்கிரஸ் மூத்த தலைவர் ஆருடம்.

0
137

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது ஜே.எம்.எம் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜே.எம்.எம் கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் முன்னணி பெற்றது.

இதைத் தொடர்ந்து 47 தொகுதிகளில் ஜே.எம்.எம் கூட்டணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஜே.எம்.எம் கட்சியின் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதிவியேற்கவுள்ளார்.

இந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏற்கனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா ஜ க ஆட்சியை இழந்திருந்த நிலையில் தற்போது ஜார்கண்டிலும் தோல்வியை சந்தித்திருப்பது பா ஜ க வுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.  இந்நிலையில்,அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் டெல்லி மற்றும் பீகார் சட்டசபை தேர்தல்களிலும் பா ஜ க தோல்வியடையும் என்று பிரித்விராஜ் சவாண் கூறியுள்ளார்

இதுதொடர்பாக மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரிதிவிராஜ் சவாண் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது

“ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 65 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று பா.ஜனதா கூறியது. ஆனால், அதில் பாதியைக்கூட கைப்பற்ற முடியவில்லை. சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவின் வீழ்ச்சி, குஜராத் தேர்தலிலேயே தொடங்கி விட்டது.

மோடி, அமித் ஷாவை போல், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மராட்டியம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்யவில்லை. இருந்தாலும், அங்கு பா.ஜனதா வீழ்ந்து விட்டது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள பீகார், டெல்லி சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜனதா தோற்கும்.” என்று கூறினார்.

Previous article‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!
Next articleநித்தியானந்தா பற்றிய அடுத்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ?