பொதுமக்களிடம் சுமார் 42,000 கோடி ரூபாய்யை மோசடி செய்த தனியார் நிறுவனம்:! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள்!

Photo of author

By Pavithra

பொதுமக்களிடம் சுமார் 42,000 கோடி ரூபாய்யை மோசடி செய்த தனியார் நிறுவனம்:! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் மக்கள்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி 42,000 கோடி அளவில் நிதி திரட்டி மோசடி செய்ததாக மக்கள் அளித்த புகாரின் பெயரில்,டெல்லி குற்றவியல் பிரிவு காவல்துறையினர்,
உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவன இயக்குனர்கள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கார்வித் இன்னோவேட்டிவ் புரமோட்டர்ஸ்,என்னும் தனியார் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டு எலக்ட்ரிக் பைக் முதலீடு திட்டம் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இந்தத் திட்டமானது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தின்படி,இந்த நிதி நிறுவனத்தில்,1.24லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூபாய் 17,000 வழங்கப்படும் என்றும்,அதேபோன்று 62,000 முதலீடு செய்தால் மாதாமாதம் 9,500 ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.

குறைந்த முதலீட்டில் நிறைய வருமானம் கிடைப்பதால் மக்கள் பலரும் இந்த திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்தனர்.இந்த நிறுவனமானது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் வரை அவர்கள் கூறியதுபடியே சரியாக மாத தவணையை மக்களிடம் கொடுத்து வந்தது.இந்த நிறுவனத்தின் மீது மக்களுக்கு அசராத நம்பிக்கை ஏற்பட்ட பிறகு,மக்களுக்கான தொகையை சரிவர வழங்காமல் ஏமாற்றியுள்ளது.இதனால் பொதுமக்கள் பலரும் காவல்துறையினரிடம் இந்த நிறுவனத்தை குறித்து புகார் தெரிவித்தனர்.குறிப்பாக டெல்லியில் இருந்து மட்டும் சுமார் 8 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றது.

இந்த புகார்களின் அடிப்படையில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவினர் தீவிர விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.இந்த விவகாரத்தில் அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான சஞ்சய் பாட்டி மற்றும் ராஜேஷ் பரத்வாஜ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் கைது செய்து விசாரித்த போது ரிசர்வ் வங்கியிடம் எந்தவித உரிமையும் பெறாமலேயே நிதி நிறுவனம் ஆரம்பித்து உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கியும் ஆய்வுசெய்ய களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.