காவல்துறை அதிகாரிகள் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு
சேலம் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வரும் போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் காவல்துறை அதிகாரிகள் அவர்களின் குடும்பங்களில் உள்ள நபர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு மூலம் வேலை வாய்ப்பினை அளித்திட டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்குறிப்பிட்டுள்ள அனைவரும் வேலை வாய்ப்பை விரும்புவோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.