தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கு அரசு கட்டணம் நிர்ணயித்து உள்ளது. கொரோனா காலத்தில் போக்குவரத்து சேவைக்காக தனியார் ஆம்புலன்சும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனுடைய சேவை கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது அரசு.
கொரோனா காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 35 ஆயிரம் வரை கொரோணா பாசிட்டிவ் கேஸ்கள் இருந்து வந்தன. அரசு ஆம்புலன்ஸில் உதவிக்கு வர முடியாத நிலையில், தனியார் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க எக்கச்சக்கமான பணத்தை சேவை கட்டணமாக வாங்கியது. இப்பொழுது இதற்கு பதிலடி கொடுத்தார் போல அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. மக்களின் அவசரத்தையும் அவர்களது சூழ்நிலையையும் புரிந்து கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகமான கட்டணத்தை வசூலித்து வந்தது கண்டனத்துக்குரியது. இது அரசின் பார்வைக்கு சென்று அரசு இப்பொழுது கட்டணத்தை நிர்ணயித்து உள்ளது.
நோயாளிகளை அழைத்துச் செல்லும் சாதாரண ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு 1500 ரூபாயும், ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு 2 ஆயிரம் ரூபாயும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூபாய் 4 ஆயிரமும் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மக்களே இதனை தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு மேல் கட்டணம் வசூலித்தால் உடனடியாக புகார் தெரிவியுங்கள். நமக்கு என்ன ஆனது என்று அவர்கள் கேட்ட பணத்தை நீங்கள் தந்தால் ஏழை எளிய மக்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கண்டிப்பாக புகார் தெரிவிக்கவும்.