தனியார் காப்பக குழந்தைகள் உயிரிழப்பு: கழிவறை இல்லை…காப்பாளர் இல்லை…அடுத்தடுத்து வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!!
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த காப்பகம் ஒன்றில் ரசம் சாதம் சாப்பிட்டு மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த காப்பகத்தில் 20 குழந்தைகள் இருந்த நிலையில் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த சாப்பாட்டை சாப்பிட்டுள்ளனர். இது குறித்த அந்த காப்பகத்தின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் பேரில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அந்த தனியார் காப்பகத்தை பார்வையிட்டுள்ளார். அப்பொழுதுதான் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது. அதுபற்றி அவர் கூறுகையில்,குழந்தைகள் ஓய்வு எடுக்கும் அறையைப் பார்த்தால் அது ஓய்வுக்கான அறை போன்றே இல்லை. குழந்தைகளுக்கு தேவையான எந்தவித பாதுகாப்பும் அந்த காப்பகத்தில் காணப்படவில்லை.
சிறு குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு கழிவறை அருகிலேயே இருக்க வேண்டும். ஆனால் இங்கு 100 மீட்டரை க்கு அப்பால்தான் கழிவறை உள்ளது. இதை வைத்துப் பார்க்கையில் அக்குழந்தைகள் கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல அந்த குழந்தைகளுக்கு என்று எந்த ஒரு காப்பாளரும் இல்லை. இரவு முழுவதும் அந்த குழந்தைகள் தனியாக தான் இருந்துள்ளனர். ஒருவர் காப்பாளர் என்று தங்கி இருக்கிறார், ஆனால் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் அவர் காப்பாளர் என்பதற்கான எந்த ஒரு பதிவும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
இவ்வாறு பல குறைபாடுகள் அந்த காப்பகத்தில் உள்ளது. சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத காரணத்தினால் தான் பரிதாபமாக அந்த குழந்தைகள் இறந்துள்ளனர். அதனால் இந்த காப்பகத்தை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் காப்பக நிர்வாகி மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். இந்த காப்பகத்தில் உள்ள மீத குழந்தைகள் ஈரோட்டில் செயல்பட்டு வரும் அரசு இல்லத்துக்கு மாற்றப்படுவர் என தெரிவித்தார்.