ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறிமாறி வெளியிட்ட அந்தரங்க போட்டோ.. டோஸ் விட்ட மேலிடம்!! உச்சகட்ட கோவத்தில் மாநில  அரசு!! 

Photo of author

By Rupa

ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாறிமாறி வெளியிட்ட அந்தரங்க போட்டோ.. டோஸ் விட்ட மேலிடம்!! உச்சகட்ட கோவத்தில் மாநில  அரசு!!

கர்நாடகாவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் இரு பெண் அதிகாரிகள் தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டு அதை இணையதளம் வரை கொண்டுவந்து இருவரும் செய்த தவறுகளை மாற்றி மாற்றி பகிர்ந்து இணையத்தை மட்டுமின்றி மக்களையும் கதிகலங்க வைத்துள்ளனர்.

இவர்கள் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு சண்டையிட ஆரம்பித்த பொழுதே மாநில அரசு கூப்பிட்டு கண்டித்திருந்தால் இது இவ்வளவு தூரம் சென்றிருக்காது என பலரும் கூறிவந்த நிலையில், தற்பொழுது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களை கூப்பிட்டு மத்திய அரசு கடுமையாக கண்டித்து அனுப்பியுள்ளது.

ஐஏஎஸ் ரோகினி சிந்துரி அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களை எடுத்து ரூபாய் ஐஏஎஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது மட்டுமின்றி அவர் உடனான சில ஐஏஎஸ் ஆண் அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார்.

அதுமட்டுமின்றி கோலாரில் பணிபுரிந்து வந்த அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஒரு சிபிஐ அறிக்கையில் ரோகிணியும் உயிரிழந்த அதிகாரியும் சாட்டிங் செய்தது எதற்கு என்றும் அது குறித்து தகவல்களையும் மாநில அரசிடம் ஐபிஎஸ் ரூபா அவர்கள் சமர்ப்பித்துள்ளார்.

இவ்வாறு மாநில அரசிடம் ரூபா அவர்கள் புகார் அளித்ததும், அவருக்கு ரிவேஞ் அளிக்கும் விதமாக ஐஏஎஸ் ரோகினி அவர்கள் தனது புகைப்படங்களை எதற்கு மற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அடுத்ததாக இவரோடு வாதத்தை முன் வைத்தார். இவ்வாறு இருவரும் ஒருவர் மேல் ஒருவராக புகார்கள் சுமத்தி புதுப்புது ஆதாரங்கள் வெளியிட்ட நிலையில் அதனை பார்க்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இவ்வாறு அரசு அதிகாரிகள் இருவரும் சண்டையிட்டு கொள்வது குறித்து மத்திய அரசின் காதை எட்டியதுடன் உடனடியாக இதற்கு தீர்வு கொண்டு வரும் பொருட்டு கர்நாடக மாநில முதல்வரை கூப்பிட்டு கண்டித்துள்ளனர்.

அங்கு அவர்கள் கடுமையாக கண்டித்துள்ள நிலையில் அதன் வெளிப்பாடு இவர்கள் இருவரின் மீதும் வந்துள்ளது. இருவரும் இனி இணையதளத்தில் இவ்வாறான புகார்களை தெரிவிக்க கூடாது என்றும் சம்பந்தம் இல்லாமல் எந்த ஒரு செய்தி ஊடகத்திற்கு சந்திக்கக் கூடாது என்று கண்டிஷன்கள் போட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வகித்த பதவிக்கு வேறொருவரை அதாவது ஐஏஎஸ் ரோகினி அவர்கள் இந்து சமய அறநிலை துறை ஆணையராக இருந்த பதவிக்கு பசவ ராஜேந்திர என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுவே ஐபிஎஸ் ரூபா அவர்கள் வகித்து வந்த கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழக இயக்குனர் பதவிக்கு பாரதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது இருவரும் அமைதியான முறையில் தங்களது வேலைகளை பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.