Breaking News

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் !

Private Placement Camp! Everyone can participate!

தனியார் வேலை வாய்ப்பு முகாம்! அனைவரும் கலந்து கொள்ளலாம் !

சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது . சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் முகாமில் உற்பத்தி ,தகவல் தொழில் நுட்பம் ,ஜவுளி ,வங்கி சேவைகள் ,காப்பீடு,மருத்துவர் ,கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்கள் நிறுவன காலிப் பணியிடங்களுக்குப்  பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.

இதைதொடர்ந்து காலை 10 மணி முதல்   மதியம் 1 மணிவரை நடைபெறவுள்ளது . இம்முகாமில் 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு ,12-ஆம் வகுப்பு ,டிப்ளமோ ,பட்டப்படிப்பு ,பொறியியல் ,ஆசிரியர் ,செவிலியர் ,தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்  வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்க வேண்டுமென்றாலும் ,வேலைக்கு சேர விருப்பமுள்ளவர்களும் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதன்  தொடர்பான விவரங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 04272401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment