இந்த ஆண்டு பிபிசியின் உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த நான்கு இந்தியர்களில் நடிகை பிரியங்கா சோப்ராவும் ஒருவராவார்.
பிரபல இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா நடிகை மட்டுமின்றி தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் தொழில்முனைவோர் என பல துறைகளிலும் சாதித்து வருகிறார். பல வெற்றி படங்களிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார், அதிக சம்பளம் வாங்கும் பிரபல நடிகையாகவும் பிரியங்கா சோப்ரா திகழ்கிறார். இந்த ஆண்டு பிபிசியின் உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த நான்கு இந்தியர்களில் நடிகை பிரியங்கா சோப்ராவும் ஒருவராவார். கடந்த 2000ல் இவர் மிஸ் இந்தியா பட்டம் வென்றதன் மூலமாக இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.
முதன்முறையாக தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் நடித்து பிரபலமானார், பின்னர் இவர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார், பிரபல நடிகர் சன்னி தியோலுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு அடுக்கடுக்காக படவாய்ப்புகள் குவிந்தது, தற்போது திரையுலகில் தனக்கு ஆரம்பகாலகட்டத்தில் ஏற்பட்ட அவமானங்கள் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் மனம் திறந்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், தன்னை பாலிவுட்டில் அனைவரும் ‘முஜ்சே ஷாதி கரோகே’ என்று அழைப்பார்கள், அதாவது என்னை அவர்கள் ‘கருப்பு பூனை’ என்று அழைத்தனர், அவர்கள் என்னை அப்படி அழைத்ததன் காரணம் எனது நிறம், அவர்கள் என் நிறத்தை வைத்து என்னை மதிப்பிட்டதை நினைத்து நான் அழகாக இல்லை என்று நினைத்தேன், பின்னர் நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், மேலும் என்னைவிட கலராக இருக்கும் சக நடிகர்களை விட நான் திறமையாக இருக்கிறேன் என்று நானே கூறிக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தனது சம்பளம் குறித்து பேசியவர் ஆரம்பத்தில் என்னுடன் நடித்த ஆண் நடிகர்கள் பெற்ற சம்பளத்தில் 10 சதவீதம் கூட எனக்கு சம்பளமாக கிடைக்கவில்லை, இருந்தாலும் அதை நான் பொறுத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார். இவர் பர்ஃபி, 7 கூன் மாஃப், மேரி கோம் மற்றும் பாஜிராவ் மஸ்தானி போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பல விருதுகளையும் பெற்று இருக்கிறார்.