ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு! வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா!
நாளை நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கும் மற்றும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குமான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை அதாவது மே 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி நாளை(மே 28) இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இதையடுத்து ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி கோப்பையை வென்று முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கு 7 கோடி ரூபாயும், நான்காவது இடத்தை பெறும் அணிக்கு 6.5 கோடி ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வைத்துள்ள வீரருக்கும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி ஊதா நிற தொப்பியை வைத்துள்ள வீரருக்கும் தலா 15 லட்சம் வழங்கப்படவுள்ளது. இந்தாண்டு வளர்ந்து வரும் வீரர் விருதிற்கு 20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. மேலும் மதிப்பு மிக்க வீரர் விருதை வெல்லும் வீரருக்கு 12 லட்சம் ரூபாயும், சூப்பர் ஸ்டிரைக்கர் விருதை வெல்லும் வீரருக்கு 15 லட்சம் ரூபாயும், கேம் சேஞ்சர் விருதை வெல்லும் வீரருக்கு 12 லட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.