ஐபிஎல் தொடர் 2023! வெளியேறியும் அரிதான சாதனையை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி!!

0
145
#image_title
ஐபிஎல் தொடர் 2023! வெளியேறியும் அரிதான சாதனையை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இரண்டாவது அணியாக வெளியேறிய போதும் அரிதான சாதனையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்வசம் வைத்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது ஐபிஎல் தொடர் நாளை(மே 28) நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடியவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது அணியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 10 போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துடன் நடப்பாண்டு ஐபிஎல் தொடரை முடித்துள்ளது.
இரண்டாவதாக வெளியேறி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அரிதான சாதனையை தன்வசம் வைத்துள்ளது. அதாவது ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர், குவாலிபையர் 2, இறுதிப் போட்டி என மூன்று வகையான போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றிய ஒரே அணி என்ற சாதனையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்வசம் வைத்துள்ளது.
2016ம் ஆண்டு நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது. குவாலிபையர் 2 சுற்றில் குஜராத் லைன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்று குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது.