வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுமார் நான்கு வருட காலம் சிறை தண்டனை அடைந்து நேற்றுவரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சசிகலா. அவருடைய தண்டனை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் அவருடைய உடல்நிலை பாதிப்புக்கு உள்ளான காரணத்தால், அவர் பெங்களூருவில் இருக்கின்ற விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதன் காரணமாக சசிகலா சிகிச்சையில் இருந்து வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்ற சிறைத் துறையின் அதிகாரிகள் அவரிடம் விடுதலை பெற்றதற்கான பத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள் இதன் காரணமாக சசிகலா அதிகாரப்பூர்வமாக நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனாலும் ஆவர் தற்போது இருக்கும் சூழ்நிலையில், சசிகலா தமிழகம் திரும்ப இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் அவர் தமிழகம் வர இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சசிகலா விடுதலை ஆனதற்கான பத்திரத்தை அவரிடம் ஒப்படைத்த சிறைத் துறையினர், அமலாக்கத்துறையின் நோட்டீஸயும் சசிகலாவிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். சென்ற வருடம் சசிகலா ,மற்றும் அவருடைய உறவினர் இல்லம் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. அந்த சமயத்தில் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்ட சூழ்நிலையில், அவற்றை வாங்கியதற்கான தகவல்களை கொடுப்பதற்கு அமலாக்கத்துறை கோரிக்கை வைத்திருந்தது.
இந்த சூழ்நிலையில் அமலாக்கத்துறை சார்பாக சசிகலாவிற்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு சசிகலா தரப்பில் பதில் அளிக்கப்படாத நிலையில், தற்சமயம் அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. விடுதலை ஆன அதே நாளில் அமலாக்கத்துறை சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள். அதேசமயம் இந்த சித்து விளையாட்டிற்கு பின்னால் மத்திய அரசு தான் இருக்கிறது என்றும் சந்தேகப்படுவதாக சொல்கிறார்கள்.
எப்படிப்பார்த்தாலும் சசிகலா தமிழகத்தில் வந்து முழு நேர அரசியலில் ஈடுபடுவார் ஆனால் அது தமிழகத்தின் ஆளும் கட்சிக்கு ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கிறார்கள். அதன் காரணமாக மத்திய அரசு அதிமுகவிற்கு இணக்கமாக செயல்பட்டு கொண்டு இருப்பதால் மத்திய அரசை வைத்து எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்து விடாத வண்ணம் காய்களை நகர்த்தி வருவதாக சொல்கிறார்கள்.