கரூர் மாவட்டத்தில் அரசு தரும் 2 ஆயிரம் நிதி உதவி தனக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படி டோக்கன் கொடுக்கும் முறையும் செயல்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் டோக்கன் கொடுக்கப்பட்டு 2000 ரூபாயை மக்கள் வாங்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில் இந்த நிதி உதவியை வைத்து கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையை கிளம்பியுள்ளது.கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோவில் என்ற பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்,வயது 52. இவரது மனைவி பெயர் காந்தி, வயது 44. இவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக ஆறு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து கொண்டு வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிதியான ரூ 2000 ரூபாயை வாங்க காந்தி நியாய விலை கடையில் வரிசையில் நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக சிவகுமார் அங்கு வந்திருக்கிறார்.
அப்பொழுது சிவக்குமார் மற்றும் காந்திக்கு இடையே சண்டை வெடித்துள்ளது. அரசு தரும் நிதி உதவியை யார் பெறுவது என்ற சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் அனைவர் முன்னிலையிலும் காந்தியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
காயமடைந்த நிலையில் காந்தி அருகிலுள்ள கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காந்தி அளித்த புகாரின் அடிப்படையில் கணவனான சிவகுமாரை போலீசார் கைது செய்தனர்.