12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்துவதில் சிக்கல்!! குழப்பத்தில் மாணவர்கள்!!
கடந்த வருடம் மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்யை கட்டுக்குள் கொண்டு வர மதிய அரசு 3 மாதம் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வந்தது. 3 மாதம் ஊரடங்கு காரணமாக அணைத்து அலுவலகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற அணைத்தும் மூடப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக சில துறைகள் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிகையுடன் செயல்ப்பட்டது.
இதனால் மதிய அரசு மாணவர்களின் நலம் கருதி ஆன்லைன் வகுப்புகளை மேற்கொண்டது. இதன்னல் மாணவர்கள் 1 ஆண்டுகலாக ஆன்லைன் வகுப்பை மேற்கொண்டனர். மேலும் முதலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆள் பாஸ் என்ற அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. பின்பு 10 ஆம் வகுப்பிற்கும் ஆள் பாஸ் என்று கூறியது. இதன் படி கொரோனா தாகம் குறைந்த நிலையில் ஜனவரி 19 ஆம் தேதி 10 மட்டும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் நேரடி வகுப்புகள் நடந்தது. பிறகு பிப்ரவரி 8 ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் நேரடி வகுப்புகள் நடந்தது. இதனால் பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோய்த்தொற்று ஏற்ப்பட்டது. இது பெற்றோர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன்னல் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்ளுக்கு இறுதி ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோன வைரஸ் உச்சத்தால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடத்தும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டது. கொரோன வைரஸ் உச்சத்தால் பள்ளிகளுக்கு செல்ல தடைப் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடத்த சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. கொரோன வைரஸ் தீவிரத்தால் பொதுத்தேர்வு ஒத்திவைக்கலாமா என தமிழக அரசு ஆலோசித்து வருகின்றது.