மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்! இனியும் இது தொடரப்படுமா கேள்வி எழுப்பும் பொது மக்கள்!

Photo of author

By Parthipan K

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்! இனியும் இது தொடரப்படுமா கேள்வி எழுப்பும் பொது மக்கள்!

திருவள்ளுவர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் ஏரி மற்றும் குளங்களின் நீர்வரத்து கால்வாயை சீரமைக்கும் பணி மற்றும் சாலைகளில் வளரும் செடி, மரங்களை அகற்றுதல் தடுப்பணை மற்றும் அரசு கட்டிடங்கள் கட்டுவது என பல பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும்  இந்த மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தில் 14 ஒன்றியங்களிலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும் ஒரு நபருக்கு 100 நாள் மட்டும் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 272 வீதம் கூலி  நிர்ணயம் செய்து இந்த தொகையை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பயனாளிகள் வருகையை கண்காணிக்கவும் அவர்களின் வருகை பதிவை பதிவு செய்யவும் பணிதள பொறுப்பாளர் என ஒரு பதவி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடம்பத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 100 நாள் திட்ட பணியாளர் பணிதள  பொறுப்பாளராக இருப்பார் தங்கள் விருப்பம் போல் பணிக்கு வந்ததாக கூறி வருகைப்பதிவு பதிவு செய்து சம்பளம் பெற்று விடுகின்ற என்று குற்றச்சாட்டை எழுந்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு மட்டுமே பணி நிர்ணயிக்கப்படுகின்றனர் எனவும் ஒரு ஊராட்சியில் மூன்று பணிகளை பொறுப்பாளர்கள் இருக்க வேண்டும் அந்த பகுதியில் சேர்ந்த ஒருவர் மூன்று பொறுப்பாளர்களுக்கும் உண்டான பணி நாட்களை உறவினர் பெயரில் மாற்றி மாற்றி செய்து வருவதாகவும் குற்றச்சாட்டை எழுந்து வருகிறது.

இதற்கு பின் வேலை கிடைக்காமல் இருக்கும் பொதுமக்களுக்கு வேலையை கூட்டுவதில்லை எனவும் கிடைக்கும் சம்பளத்திலும் பல்வேறு குளறுபடி நடந்து வருகிறது எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாற்றி வருகின்றனர். மேலும் வேலைக்கு செல்லும் பெண்களின் பெயரில் நூறு நாள் திட்ட அட்டை வாங்கி அவர்களின் பெயரில் வேறொருவர் பணி செய்து கணக்கு காட்டி ஊதியம் பெறுகின்றனர் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு செய்யும்பொழுது 75 சதவீதம் ரூபாய் பணிதள பொறுப்பாளர் எடுத்துக் கொண்டும் 25% ரூபாய் பணிய அட்டை பெற்றுள்ள பெண்ணுக்கு தருகின்றார் எனவும் கூறப்படுகிறது.

மேலும் பெயர் குறிப்பிடாத வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பனித்தள  பொறுப்பாளர்களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே முடியும் எனவும் ஒரு முறை பயணி செய்துவிட்டால் அதன் பின் ஓராண்டு கழித்து தான் அவர்கள் மீண்டும் பணி செய்ய முடியும் எனவும் கூறினார். மேலும் இதில் சில தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தலையிட்டு சுழற்சி முறையில் பணித்தள  பொறுப்பாளர்கள் நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது எனவும் மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.