உலகம் முழுவதும் நீரால் தான் இயங்குகிறது. உணவு இன்றி கூட சில நாட்களுக்கு நாம் இருந்து விடலாம் ஆனால் நீர் இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. மனித வாழ்வை பொருத்த வரையில் நீர் அடிப்படை தேவைகளில் முதன்மையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த தண்ணீரை ஒவ்வொரு தரப்பு மக்களும் ஒவ்வொரு முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் பல மக்கள் குழாய் நீரை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சில அந்த தண்ணீரை சுத்திகரித்து RO Water என்ற பெயரில் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் வீடுகளில் ஆர்.ஓ. பியுரிபயர் இயந்திரங்களை பொருத்தி அதன் மூலம் தங்கள் வீட்டு தண்ணீரை சுத்திகரித்து பருகுகின்றனர். மேலும் சிலர் இந்த தண்ணீரை கேன் மூலம் வாங்கி வீடுகளில் பயன்படுத்துகின்றனர். இதுபோல சுத்திகரித்து வரும் நீரை நாம் மினரல் வாட்டர் என்று கூறுகிறோம். ஆனால் அது மினரல் வாட்டர் இல்லை. அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தான்.
நாம் வீடுகளில் தண்ணீரை சுடவைத்து பருகும் பழக்கம் இருக்கும் அதுப்போன்ற நேரங்களில் நாம் பயன்படுத்தும் கேன் வாட்டர் சுத்திகரிக்கப்பட்டு தான் வருகிறது என்பதால் அதனை நாம் சுட வைத்து பருகலாமா என்ற கேள்வி நாம் அனைவரிடமும் ஒரு முறையாவது எழுந்து இருக்கும். அப்படி செய்தால் அதிலுள்ள சத்துக்கள் நீங்கிவிடும் என்று பலரும் கூறுவர். நம் வீடுகளில் பயன்படுத்தும் கேன் வாட்டரை சுட வைத்து குடிக்கலாமா என்று தெரிவதற்கு முன்பு மினரல் வாட்டர் என்பது என்ன என்று பார்க்கலாம்.
மினரல் வாட்டர்
நம் வீடுகளில் நாம் பயன்படுத்தும் தண்ணீரை சுத்திகரித்து பின்னர் அந்த தண்ணீரில் உள்ள பாக்டிரியா, வைரஸ் ஆகியவற்றை சுத்தப்படுத்தி அதில் குறிப்பிட்ட அளவு மினரல் சத்துக்களை சேர்த்து அதன் பிறகு விற்பனை செய்யப்படும் தண்ணீர் தான் மினரல் வாட்டர்.
மினரல் வாட்டரை சுட வைத்து குடிக்கலாமா?
மினரல் வாட்டர் நன்றாக சுத்திகரிக்கப்பட்டு அதன் பிறகு அதில் சில வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் இதனை கொதிக்க வைக்கும் போது அதில் உள்ள சத்துக்கள் நீங்கிவிடும் இதன் காரணமாக மினரல் வாட்டரை கொதிக்க வைக்கக் கூடாது.
ஆனால் நம் வீடுகளில் நாம் பயன்படுத்திவரும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தானே தவிர அது மினரல் வாட்டர் இல்லை. எனவே நம் வீடுகளில் பயன்படுத்தும் கேன் தண்ணீரை நாம் சுட வைத்து குடிக்கலாம். அதனால் எந்த பிரச்சனையும் வராது.
நாம் இப்பதிவில் மினரல் வாட்டரை சுட வைத்து குடிக்கலாமா என்பது குறித்து பார்த்துள்ளோம்.