உங்களது பொங்கல் தொகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? இதோ உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!
தற்பொழுது கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளது. பண்டிகையின் காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிகளவு கூட்டம் கூடுவர். இதனையெல்லாம் தடுக்க மாநில அரசு அதிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு முன்பு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்றவர்கள் தனிமனித இடைவெளி கடைபிடித்து பொங்கல் பரிசு வாங்கி செல்கின்றனர். இம்முறை 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொங்கல் தொகுப்பு பரிசாக வழங்கப்படுகிறது.
இது சுமார் 2.15 கோடி பேருக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த பரிசு பொருட்களை ரேசன் அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசித்து வருபவரும் பெற்று வருகின்றனர். பச்சரிசி ,வெல்லம், முந்திரி, திராட்சை ஏலக்காய் பாசிப்பருப்பு நெய் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ,கடுகு ,சீரகம் ,மிளகு ,கடலைப்பருப்பு ,உளுத்தம்பருப்பு, ரவை,கோதுமை உப்பு ஆகிய இருபது மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பரிசாக வழங்குகின்றனர். இந்த தொகுப்புடன் சேர்த்து கரும்பும் வழங்கப்படுகிறது. நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பகுதியில் இருக்கும் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
அவ்வாறு வாங்கிச் சென்ற ஒருவருக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் புளியுடன் சேர்த்து பல்லியும் இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை கண்ட மக்கள் ரேசன் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்செய்தி அனைத்து மக்களிடமும் பரபரப்பாக பேசப்பட்டது. பல கோடி ரூபாய் செலவு செய்தும் தரமான பொருட்களை வழங்க முடியவில்லை என தமிழக அரசிடம் மக்கள் பல கேள்விகளை எழுப்பி வந்தனர்.அதன் விளைவாக இன்று முதல்வர் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று நியாயவிலை கடைக்கு சென்று வழங்கப்பட்டு கொண்டிருந்த பொங்கல் பரிசு தொகுப்பு தரமானதாக உள்ளதா என்பதை நேரடியாக ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகத்தின் போது ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால் 180059935430 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் ஆய்வு செய்து தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.