300 கோடி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்! நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டேக்கா கொடுக்கிறாராம்!!

Photo of author

By Parthipan K

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் மோசடி வழக்கில் சிக்கிக் கொண்டார். இந்த வழக்கை ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்திய சென்னையை சேர்ந்த நீதிமணி ராமநாதபுர ஆசிரியர் ஆனந்த் உள்ளிட்டோர் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ஞானவேல் ராஜாவின் மீது புகார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு வழக்கின் கீழ் ஞானவேல் ராஜாவிற்கு சம்மன் அனுப்பி, நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டது

இந்த சம்பவத்திற்கு முன்னாள் காவல்துறையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி ஞானவேல்ராஜா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ஆனால் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.அதை எடுத்து ஆஜரான ஞானவேல் ராஜாவிடம் காவல்துறை சார்பில் 64 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் திரைப்பட வெளியீட்டு உரிமை கோரி நீதிமன்றம் தந்ததாக ஞானவேல்ராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.பணம் பெற்றதற்கான ஆவணங்களைத் தருமாறு ஞானவேல் ராஜாவிடம் காவல்துறை அதிகாரிகள் கூறியதுடன் திங்கட்கிழமை ஆகஸ்ட் 10ம் தேதி ஆஜராகவும் உத்தரவிட்டார்.

ஆனால் திங்கட்கிழமை மாலை வரையில் ஞானவேல்ராஜா ஆஜராகாமல் டிமிக்கி அடித்துள்ளார்.அவரது சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி விசாரணைக்கு அவகாசம் கோரியுள்ளார். இதனை ஏற்ற காவல்துறையினர் புதன்கிழமை ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கூறினார் இதையடுத்து புதன்கிழமை அவர் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்