வலிமை படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்!

0
114

வலிமை படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்!

அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இந்த வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித் – போனி கபூர் – H.வினோத் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. இதனால், வலிமை படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதாக இருந்த நிலையில் கொரோனா பரவலின் காரணமாக, ‘வலிமை’ படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வலிமை திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து, பிப்ரவரி 24ம் தேதி வலிமை திரைபடத்தை உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக, அதிகமான தியேட்டர்களில் வெளியிட படக்குழு ஏற்பாடு செய்து வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ‘வலிமை’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து உள்ளது.

வலிமை படத்தின் பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, படத்தின் மேகிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில், வலிமை படத்தின் டிரைலர் வெளியானது. படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், வலிமை திரைப்படத்தின் புதிய வீடியோவை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
Parthipan K