ஐஐடி கான்பூர் நிலையத்தில் வந்த உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் பிரமோத் சுப்பிரமணியம் என்பவர்.இவர் நேற்று மாலை ஐஐடி கான்பூர் கல்வி நிலைய வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பிரமோத் சுப்ரமணியம் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.33 வயதே ஆன இவர் நேற்று மாலை திடீரென ஐஐடி வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த கலியான்பூர் காவல் துறையினர் பிரமோத் சுப்ரமணியம் உடலை கைப்பற்றி இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஐஐடி இயக்குனர் பேராசிரியர் அபே கரந்திகர் இது குறித்து கூறியதாவது,பிரமோத் சுப்பிரமணியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து நான் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறையில் வளர்ந்து வரும் ஒரு இளம் பேராசிரியரை இழந்து விட்டோம்.அவரது பிரிவில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தித்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிரமோத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை.மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐஐடி கான்பூர் மூடப்பட்ட நிலையில் வளாகத்திற்குள் வசித்து வந்தவர்கள் மட்டுமே அங்கு இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.