பணிக்கு வர மறுக்கும் பேராசிரியர்கள்! நடவடிக்கை எடுக்க உத்தரவு!

Photo of author

By Hasini

பணிக்கு வர மறுக்கும் பேராசிரியர்கள்! நடவடிக்கை எடுக்க உத்தரவு!

Hasini

Professors who refuse to come to work! Order to take action!

பணிக்கு வர மறுக்கும் பேராசிரியர்கள்! நடவடிக்கை எடுக்க உத்தரவு!

கல்லூரி கல்வி இயக்குனர் ஸ்ரீ பூர்ண சந்திரன் அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்கள், அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் அனைவருக்கும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் மூலம் அவர் இவ்வாறு  கூறியுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தேர்வு தொடர்பான பணிகளை மேற்கொள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் அனுப்பியும் சில கல்லூரி முதல்வர்கள் ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்காமல்  இருந்துள்ளனர்.

மேலும் பெரும்பாலான கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்காமல் உள்ளதன் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது சார்ந்து கல்லூரி முதல்வர்கள் உரிய அறிவுரை வழங்கி பேராசிரியர்களை விடுவிக்குமாறு கூறப்பட்டு உள்ளது.

அப்படியும் விடுவிக்காத கல்லூரி முதல்வர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தேர்வு வாரியத்தின் மூலம் பெறப்பட்ட கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட பேராசிரியர்களை தேர்வு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக உடனே பணியிலிருந்து விடுவிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கல்லூரி முதல்வர்கள் தேர்வு பணிகள் மேற்கொள்ள அழைத்தும் வர மறுக்கும் பேராசிரியர்கள் மீதும் விதிகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் அந்த கடிதத்தின் மூலம் கல்லூரி கல்வி இயக்ககத்தினால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.