தமிழக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் !! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அனைத்து மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் , புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில் 12 ஆம் ஆண்டு வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2019 ஆண்டு வரை 48 லட்சம் மாணவ, மாணவிகள் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. அதன் பின் கொரோனா தொற்று பரவலால் மடிக்கணினி உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் மடிக்கணினி தயாரிக்க தேவையான உபகரணங்களுக்கு தட்டுப்பாடுஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கழிவறைகள் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். அதன் பின் நிதிச்சுமை சரியான பிறகு மாணவர்களுக்கு மடிக்கணினி வழக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.